என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heav rain"

    • புதுச்சேரியில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வட கடலோர மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடலில் நகர்நது வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நவம்பர் 12-13ம் தேதிகளில் தமிழகம்- புதுச்சேரியில் கரையை கடக்க உள்ளது.

    இதன் எதிரொலியால், வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், புதுச்சேரியில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக குன்னூரில் 3 செ.மீ அளவுக்கு அதிகனமழை பெய்துள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    அந்தமான் கடல்பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ வேகத்தில் காற்றுவீசும் என்பதாலும், மத்திய கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக குன்னூரில் 3 செ.மீ அளவுக்கு அதிகனமழை பெய்துள்ளது.

    ×