என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக குன்னூரில் 3 செ.மீ அளவுக்கு அதிகனமழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அந்தமான் கடல்பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ வேகத்தில் காற்றுவீசும் என்பதாலும், மத்திய கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக குன்னூரில் 3 செ.மீ அளவுக்கு அதிகனமழை பெய்துள்ளது.
Next Story






