search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Council"

    • சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் அவிநாசி ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது.
    • மருத்துவ பணியாளர்கள் தினமும் செல்லும் இடம், நேரம் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அவினாசி :

    அவிநாசி வட்டார சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் அவிநாசி ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இணை இயக்குனர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    இதில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்கள் தினமும் செல்லும் இடம், நேரம் குறித்து அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். வாத நோயால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கியுள்ளோருக்கும் தொடர் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் யோசனை தெரிவித்தனர்.

    டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக 5 கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தில் கொசு மருந்து தெளிப்பு உபகரணம் வாங்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ் ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் வட்டார அளவில் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் பங்கேற்றனர்.

    ×