என் மலர்

  நீங்கள் தேடியது "Happy New Year 2019"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கும் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். #HappyNewYear2019 #ViratKohli
  ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மெல்போர்ன் டெஸ்ட் நேற்று முடிவடைந்தது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி சிட்னி சென்றுள்ளது.

  இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவது மனைவி அனுஷ்கா ஷர்மாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இன்று அவர்கள் சிட்னியில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

  விராட் கோலி தனது டுவிட்டரில் ‘‘இந்தியா மற்றும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். சிறப்பான ஆண்டாக அமைய கடவுள் ஆசிர்வதிப்பார்’’ என்று பதிவிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை புதிய ஆண்டு பிறக்கவிருக்கும் நிலையில், நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டால் நாளும் புதியதாகும் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vairamuthu #HappyNewYear #HappyNewYear2019
  2018-ம் ஆண்டு இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், 2019 ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், உலகம் முழுக்க கோலாகல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

  வைரமுத்து தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது,

  `ஆண்டில் ஏது பழையதும் புதியதும்?
  நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால்
  நாளும் புதியதாகும்.
  புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம்.
  வாழ்த்துக்கள்.
  #2019 #HappyNewYears2019 #HappyNewYear'

  இவ்வாறு கூறியிருக்கிறார். #Vairamuthu #HappyNewYear #HappyNewYear2019

  ×