search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handicapped suicide"

    வந்தவாசியை அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி ( 45) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். மீனா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 வருடத்திற்கு முன்பாக சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் இரண்டு மகன் மற்றும் மகள் மாரியின் பராமரிப்பில் உள்ளனர்.

    இந்நிலையில் மீனாவின் உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம் கீழ்பாக்கம் கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி அன்று நடந்தது. இதில் கலந்துகொள்ள மீனா கீழ்பாக்கம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது தாயை பார்த்த மகன்கள், மகள் தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    அப்போது மாரிக்கும் மீனாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மறுநாள் 16 ஆம் தேதி அன்று காலை வீட்டின் பின்பகுதியில் உள்ள புளிய மரத்தில் மாரி தூக்கில் தொங்கினார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அவரது மகன் கார்த்திக் கீழ்கொடுங்காலூர் போலீசில் நேற்று புகார் செய்தார் . அதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.‌
    ×