search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hand given"

    • கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
    • 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்ப நாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப் பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமார பாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங் களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன் பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் அக்டோபர் மாதம் 25-ந்தேதி அணையின் நீர்மட்டம் 50.52 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 175.60 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அணைக்கு வந்த தண்ணீர், 2 மாதங்களுக்கு மேலாக ஆற்றில் உபரிநீராக திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நீர்பிடிப்பு பகுதியிலும், ஆயக்கட்டு பாசன பகுதியிலும் மழை இல்லாததால், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக சுழற்சி முறையில் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 27.52 அடியாக சரிந்து போனது.

    இந்த நிலையில், கடந்த 2 மாதமாக அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதி யான கல்வராயன் மலை பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து, நேற்று மாலை நிலவரப்படி 31.69 அடியாக உயர்ந்தது.

    தற்போது அணையில் 69.87 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும் அணை பாசன கிராமங்களில் எதிர்பார்த்த அளவிற்கு கோடை மழை கைகொடுக்காததால், பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக் கின்றனர்.

    ×