search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haj Yatra"

    • தகுதியுள்ள பயனாளி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.
    • திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலா ரூ.25,070-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பயணிகள் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்கி வருகிறது.

    அதற்காக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயனாளி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலா ரூ.25,070-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகம்மது நஜிமுத்தின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறுபான்மை நல இயக்குநர் மு. ஆசியா மரியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

      சென்னை:

      சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்களுக்கான தமிழ்நாடு மாநில ஹஜ் குழு புத்தறிவுப் பயிற்சியை, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 4,074 ஹாஜிக்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் ஜூன் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தினமும் இரு விமானங்கள், ஜூன் 11-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை தினமும் ஒரு விமானம் மூலம் பயணம் மேற்கொள்வார்கள்.

      நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுதின் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

      ×