search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt employee died"

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வீட்டின் கான்கிரீட் சிலாப் இடிந்து விழுந்தததில் அரசு ஊழியர் பலியானார். #GajaCyclone
    சிவகங்கை:

    சிவகங்கை நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 56). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை முத்து முருகன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது பக்கத்து வீட்டின் சிலாப்பு இடிந்து அவர் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த முத்துமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #GajaCyclone
    கோவை செல்வபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த அரசு ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் மண்ணாதன். இவரது மகன் விஜயகுமார் (வயது 28). கோவை கலெக்டர் அலுவலத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் பயிற்சி முகாமுக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி உள்ளார். வீட்டில் இருந்த தனது தந்தையிடன் உடல் சோர்வாக இருப்பதால் நாளைக்கு வேலைக்கு செல்லவில்லை என கூறி உள்ளார்.

    இன்று காலை மண்ணாதன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் தற்கொலை செய்த கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×