search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt bus collapsed"

    மண்ணச்சநல்லூர் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் 4 பேர் காயம் அடைந்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சியில் இருந்து நாமக் கல்லுக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதில் 32 பயணிகள் இருந்தனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ரெட்டை மண்டபம் பகுதியில் செல்லும் போது, சாலை யோரத்தில் பஸ் இறங்கிய போது திடீரென நிலைதடுமாறி அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பயணிகள் பலத்த காயமடைந்தனர். மற்ற பயணிகள் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று உடனடியாக ஊருக்கு புறப்பட்டு சென்றனர். 

    மழை தண்ணீர் சாலையோரத்தில் தேங்கி சேறும் சகதியுமாக கிடந்ததால் பஸ் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. கவிழ்ந்த பஸ் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 12 பேர் நசுங்கினர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    திண்டுக்கல்:

    கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் செம்பட்டி அருகே புதுச்சத்திரம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதனால் பஸ்சில் வந்த பயணிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். பஸ் டிரைவர் பெரியசாமி, பயணிகள் வேல்முருகன், குருவம்மாள், ரவிக்குமார், முனியம்மாள், மாரியம்மாள், ஜெயஸ்ரீ உள்பட 12 பேர் விபத்தில் நசுங்கினர்.

    இவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    ×