என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Primary Health Centers"

    • தென்காசி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்க ளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
    • இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண் ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஜி.என்.எம். அல்லது பி.எஸ்.சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்க ளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்்படவுள்ளனர்.

    இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண் ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஜி.என்.எம். அல்லது பி.எஸ்.சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு புதுப்பித்தி ருக்க வேண்டும்.

    மேற்கண்ட பணியிடங்க ளுக்கான விண்ணப்ப படி வங்கள் தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/recruitment/-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ துணை இயக் குநர் சுகாதாரப் பணிகள் (மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்), தென்காசி - 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப் பங்கள் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×