search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "four dead"

    சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #ChicagoHospitalShooting
    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகோகா நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் நேற்று புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனைப் பார்த்த போலீசார் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில்  தாக்குதல் நடத்தினர்.



    இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChicagoHospitalShooting

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று பின்னலாடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #HosieryFactoryFire
    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கல்யாண் நகரில் பின்னலாடை தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று அதிகாலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணி செய்துகொண்டிருந்தபோது ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. ஏராளமான துணி மூட்டைகள் பற்றி எரிந்தன. இதன் காரணமாக எழுந்த கரும்புகை மூட்டம் அந்த பகுதி முழுவதும் பரவியது.



    தீ பிடித்ததும் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஒரு சில தொழிலாளர்கள் புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் உள்ளே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பல லட்சம் மதிப்பிலான ஆடைகள் எரிந்து சாம்பலாகின. #HosieryFactoryFire
    ×