search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "four arrest"

    காஞ்சீபுரத்தில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த பார் ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளின் பார்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் காஞ்சீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்பனை செய்த காஞ்சீபுரம் ரெட்டிபேட்டை சாலியர் தெருமேட்டு தெரு நெல்லுக்காரதெரு பகுதியில் உள்ள பார் ஊழியர்கள் கிருபானந்தன், நாகராஜ், முருகன், பசுபதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    பஞ்சாப் மாநிலத்தில் இருந்து காஷ்மீருக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்த அதிகாரிகள் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். #Rs100crore #Rs100croreHeroin #Heroinseized
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி மோர்ஹ் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது, காரினுள் 22.145 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் காருடன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தின் ஹன்ட்வாரா நகரில் இருந்து இந்த ஹெராயினை கடத்திவந்த 3 பேரை கைது செய்த அதிகாரிகள், கடத்தல் ஹெராயினை பெற்றுகொள்ள காஷ்மீரில் காத்திருந்தவரையும் கைது செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சந்தை மதிப்பு சுமார் 100 கோடி என தெரியவந்துள்ளது. #Rs100crore  #Rs100croreHeroin #Heroinseized 
    ×