search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food Corporation"

    • இந்திய உணவுக் கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது
    • இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அங்கமாக உணவுக் கழகம் உள்ளது

    சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையை மாற்றி அமைத்து, இந்தியாவின் உணவுத்தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யும் நோக்கில், அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அரசு, 1965-ம்ஆண்டு இந்திய உணவுக் கழகத்தை (எஃப்சிஐ) உருவாக்கியது. இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது.

    இந்தக் கழகம் உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உணவுக் கழகத்தின் பங்களிப்பு குறித்துப் பேசினார்.

    அவர் பேசியதாவது, "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அங்கமாக உணவுக் கழகம் உள்ளது. உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, ஏழை மக்களுக்கு விநியோகிப்பதில் அதன் சாதனை வரலாற்று முக்கியத்துவமிக்கது. இந்தக் கழகம் வழியே இந்தியாவின் உணவு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

    மேலும், சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊழலற்ற நிர்வாகம் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நம்பிக்கையை பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

    ×