search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermen rescued"

    • நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர்.
    • படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மீனவர்கள் 11 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென படகு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர் விரைந்து வந்து படகில் இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது. படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.
    • அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து நேற்று மதியம் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த அஜித், பாரதி, மனோ ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.

    மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீன் பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்தது மூழ்கியது.

    படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.

    அப்போது அவ்வழியாக மீன்பிடித்துக்கொண்டு வந்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு பைபர் படகு வந்தது. அந்தப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் மீட்டு புஷ்பவனம் கடற்கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

    மீனவர்கள் 4 பேரும் 5 மணி நேரம் கடலில் தத்தளித்ததாலும், அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்தோனேசியாவில் கடந்த ஜூலை மாதம் புயலில் படகுடன் அடித்து செல்லப்பட்ட மீனவர் 49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். #AldiNovelAdilang
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் ஆல்டிநோவல் அடிலாங் (19). இவர் படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடம் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்கின்றன.

    கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் புயல் தாக்கியது. அதில் அவரது படகு அடித்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கடலில் தொடர்ந்து தனியாக பயணம் செய்து கொண்டே இருந்தார்.

    49 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அவர் ஜப்பான் கடற்கரையை சென்றடைந்தார். வழியில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து சென்றன. அவர்களிடம் உதவி கோரினார். யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.


    49 நாட்களுக்கு பிறகு பனாமா நாட்டு டேங்கர் கப்பலுக்கு ரேடியோ சிக்னல் கொடுத்து தான் ஆபத்தில் இருப்பதை உணர்த்தினார். அவர்கள் அடிலாங்கை உயிருடன் மீட்டு ஜப்பான் அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர் இந்தோனேசியாவில் உள்ள தனது சொந்த ஊரான மனாடோவுக்கு சென்றார்.

    கடலில் தனியாக பயணம் செய்த காலத்தில் மீன்களை பிடித்து அவற்றை படகு வீட்டின் கட்டைகளை விறகாக்கி சமைத்து சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக கூறினார்.

    கடல் நீரை துணியால் வடிகட்டி சிறிது உப்பை அகற்றி தண்ணீர் குடித்ததாகவும் கூறினார். #AldiNovelAdilang
    ×