காக்கிநாடா அருகே நடுக்கடலில் படகில் தீ: 11 மீனவர்கள் மீட்பு

நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர். படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது.
காக்கிநாடா அருகே நடுக்கடலில் படகில் தீ: 11 மீனவர்கள் மீட்பு
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மீனவர்கள் 11 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென படகு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர் விரைந்து வந்து படகில் இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது. படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com