search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "face cream"

    • முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது.
    • எந்த காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது.

    சருமம் மற்றும் கேசத்தை பொறுத்தவரை, செய்யக் கூடாத தவறுகள் நிறைய இருக்கின்றது. அதில் சில தவறுகள் இங்கே உங்களுக்காக...

    * வெந்நீரில் குளிப்பது நல்லது தான் ஆனாலும், கூந்தலை அலச வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அது கூந்தலில் உள்ள வேர்களை பாதிப்பதோடு, பலவீனமாக்கும்.

    * மேல் உதடு, தாடையில் ரோம வளர்ச்சி ஹார்மோனல் இம்பேலன்ஸ்னால் ஏற்படக்கூடும். அது அழகு பிரச்சினை இல்ல, ஆரோக்கியப் பிரச்சினை என்று புரிந்துகொண்டு டாக்டரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

    * உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சருமத்துக்கு இயற்கையாகவே அழகு கிடைக்கும்.

    * நீங்கள் பயன்படுத்தும் துண்டை மூன்று நாள்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். தலையணை உறைகளை ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை மாற்றணும். ஏன்னா, இதில் எல்லாம் இருக்கும் நுண்ணுயிர்கள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    * முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்கு கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாகத்தான் கையாள வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினால் போதுமானது.

    * எந்த காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது. அப்படி செய்தால் பரு போகாது. அதனுள் இருக்குற நுண்ணுயிர் இன்னும் ஆழமாகச் சென்று பாதிப்புகளை அதிகமாக்கவே செய்யும்.

    * உறங்கச் செல்லும் முன்பு மேக்கப் ரிமூவ் செய்றதுல சோம்பேறித்தனம் கூடவே கூடாது. மேக்கப் உடன் தூங்கினால் சருமத்துக்கு பல மடங்கு வேகமாக வயசான தோற்றத்தை அளிக்கும் என்று கூறுகிறார்கள் சரும நிபுணர்கள்.

    * ரசாயனங்களால் ஆன பிளீச்... அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக தேன், உருளைக்கிழங்கு, தயிர் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

    * சில யூடியூப் வீடியோக்களில `ஸ்கின் வொயிட்டனிங்க்கு பேக்கிங் சோடா'னு பார்த்துட்டு, அதை டிரை செய்யக்கூடாது. சோடா சருமத்தை அதிகமாக உலரச் செய்யும். எனவே முகத்தில் பருக்கள், அரிப்பு, வீக்கம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

    * தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணும்போது அந்த ஹீட் முடியின்வேர்களைப் பாதிக்கும். முடி உதிர்வதும் அதிகரிக்கும். அதனால் அதை தவிர்ப்பதே நல்லது.

    இறுதியா ஒரு விஷயம். என்னதான் பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்தினாலும், ஃபேஸ் பேக்ஸ் போட்டாலும் கிடைக்காத பொலிவு... ஒரு விஷயத்தைப் செய்தால் கிடைத்துவிடும். அது தான், சத்தான உணவை சாப்பிட வேண்டும், நிறைய தண்ணி குடிக்க வேண்டும். அதுதான் குளோயிங் ஸ்கின்னுக்கான ஓப்பன் சீக்ரெட்...!

    • முகத்தின் அழகினை கெடுப்பது கருவளையங்கள்.
    • இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும்.

    கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான். முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க இந்த ஒரே ஒரு கிரீம் மட்டும் போதும். இந்த நைட் கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 1

    பாதம் பொடி - 1 ஸ்பூன்

    கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

    தயாரிக்கும் முறை:

    * முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி இதனை நன்கு துருவி கொள்ள வேண்டும்.

    * பின்னர் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி கொண்டு அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * உருளைக்கிழங்கு சாறை ஒரு சின்ன பவுலில் சேர்த்து அதில் பாதம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்தால் கிரீம் ரெடி.

     பயன்படுத்தும் முறை:

    முதலில், தினமும் இரவில் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் தயார் செய்து வைத்துள்ள நைட் கிரீமை முகத்தில் தடவ வேண்டும். அப்படியே இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முகத்தில் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.

    • ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல்.
    • இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும்.

    இயற்கையான அணுகுமுறைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம், உங்களை அழகாகக் காட்டலாம். உங்கள் சருமத்தைப் பாதுகாத்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சீரான தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுதல் ஆகியவை உங்கள் இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும். என்றும் இளமையுடன் அழகாக இருப்பதற்கு உதவும் இயற்கை முறைகளை குறித்து இங்கு காணலாம்.

    * பப்பாளி பழத்தை எடுத்து துருவிக்கொள்ள வேண்டும். அதில் காபி தூள் கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், தேன் கால் டீஸ்பூன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து மிதமான தண்ணீரில் கழுவ வேண்டும்,

    * ஒரு பவுலை அடுப்பில் வைத்து அதில் 100 கிராம் பாலை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அந்த கலவை கெட்டியானதும் இறக்கி வைத்து அதில் கால் டீஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கற்றாலை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி பயன்படுத்தலாம்.

    முகத்தில் உள்ள கருமை நீங்கவும், முகம் பொலிவு பெறவும், சருமம் வறண்டு விடாமல் இருப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். முகத்திற்கு நல்ல பளபளப்பு கிடைக்கும்.

    * 2 ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து ஒரு வாணலியில் போட்டு அதனை நன்றாக நிறம் மாறி வருகிற அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும். அது பார்ப்பதற்கு மஞ்சள் நிறம் மாறி காபி பொடி கலரில் இருக்கும். இதனை ஒரு கின்னத்தில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். இதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு சிறப்பான டீடேன் பேக்காக இருக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மாறி முகம் மென்மையாக இருக்கும்.

    * உதடு கருமை நீங்க பீட்ருட்டை மிக்சி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி அதில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த கலவை கெட்டியானதும் அதனை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இப்போது இயற்கையான முறையில் லிப் பாம் தாயார்.

    * முதலில் உதட்டை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இதனை உதட்டில் ஸ்க்ரப்பாக பயன்படுத்தி தேய்த்து எடுக்க வேண்டும். அதன்பிறகு தயார் செய்து வைத்துள்ள லிப் பாமை பயன்படுத்தலாம்.

    * முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை அகற்றுவதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயார் செய்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து ஒரு ஈரமான துணிகொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.

    ×