கருவளையம் நீங்க வீட்டிலேயே தயாரிக்கலாம் நைட் கிரீம்

முகத்தின் அழகினை கெடுப்பது கருவளையங்கள்.இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும்.
கருவளையம் நீங்க வீட்டிலேயே தயாரிக்கலாம் நைட் கிரீம்
Published on

கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான். முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க இந்த ஒரே ஒரு கிரீம் மட்டும் போதும். இந்த நைட் கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு- 1

பாதம் பொடி - 1 ஸ்பூன்

கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

* முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி இதனை நன்கு துருவி கொள்ள வேண்டும்.

* பின்னர் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி கொண்டு அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* உருளைக்கிழங்கு சாறை ஒரு சின்ன பவுலில் சேர்த்து அதில் பாதம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்தால் கிரீம் ரெடி.

 பயன்படுத்தும் முறை:

முதலில், தினமும் இரவில் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் தயார் செய்து வைத்துள்ள நைட் கிரீமை முகத்தில் தடவ வேண்டும். அப்படியே இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முகத்தில் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com