என் மலர்
நீங்கள் தேடியது "Ezhuvankottai"
- தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
- 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தேவகோட்டை அருகே உள்ள எழுவங்கோட்டை கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத விஸ்வநாதசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலின் வைகாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம்நடந்தது. முன்னதாக கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி யானை, குதிரை, காளை, மயில் வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் மற்றும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடை பெற்றது.
கோவிலை சுற்றி 4 வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. தேர் நிலையை அடைந்ததும் மாம்பழம், வாழைப்பழங்களை சூறை விட்டனர். அதனை பக்தர்கள் பிடித்து எடுத்து சென்றனர்.
இதில் எழுவன்கோட்டையை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களான தென்னிலை நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.






