search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eric Garcetti"

    • வீடியோ 2.35 லட்சம் பார்வைகளுடன் 4,300-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும் தங்கள் மாநில உணவு வகைகளை உண்டு மகிழ வருமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பெரிய வாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டது. ஸ்பூன், கத்தி இல்லாமல் கைகளில் எடுத்து உண்பது வித்தியாசமாக இருப்பதாக கூறிய அவர், கார பணியாரம், தேங்காய் சட்னி, வடை, கூட்டு, பொறியல் என 14 வகைகளுடன் உணவுகளை ருசித்தார். பாயாசத்துடன் அவர் தனது உணவை முடித்தார். இது நல்ல சுவையாக இருந்தது என கூறினார்.

    இதுதொடர்பான வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வணக்கம், தென்னிந்தியாவின் தாழி உணவினை வாழை இலையில் சாப்பிட்டேன். தென்னிந்திய உணவு என்னை மிகவும் ஈர்த்துள்ளது. சென்னைக்கு என் இதயத்தில் இடம் உள்ளது. விரைவில் உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த வீடியோ 2.35 லட்சம் பார்வைகளுடன் 4,300-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

    வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும் தங்கள் மாநில உணவு வகைகளை உண்டு மகிழ வருமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


    Vanakkam from Tamil Nadu Bhawan in Delhi! Today, I tried the iconic south Indian thali on a banana leaf, and I am so impressed by the complexity of these delicious south Indian delights. Chennai, you have my heart and I am excited to see you soon. #AmbExploresIndia pic.twitter.com/HrUoiD0Dma

    ×