search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enterpreneurship"

    • கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு நடத்திய ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.
    • தென்தமிழத்தில் உள்ள பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள் 45 பேர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பும் மற்றும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் புதுமை அமைப்பின் 5-வது மண்டலமும் இணைந்து நடத்திய ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.

    இதன் தொடக்க விழா லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி கருத்தரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் மற்றும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விக்னேஷ்வரி ஆகியோர்கள் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து தலைமையுரை யாற்றினர். முன்னதாக, தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் புதுமை அமைப்பின் 5-வது மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் வரவேற்று பேசினார்.

    3 நாட்கள் பயிற்சி முகாமில் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் நிகழ்ச்சியின் புதுமை அமைப்பின் முதுநிலை பயிற்சியாளர் டாக்டர் திலீபன்குமார் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் மண்டல அளவிலான தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி ஆகியோர் கலந்து கொண்டு "தொழில்முனைவோர் யார்? தொழில் முனைவோர்களை உருவாக்குதல், தொழில் முனைவோருக்கு தேவைப்படும் திறமைகளை வளர்த்தல், தொழில் மாதிரிகள், அறிக்கை தயார் செய்தல், அரசு சலுகைகள் மற்றும் பொருட்களை சந்தை படுத்துதல்" போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதன் நிறைவு விழா கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் தலைமை உரையாற்றினார். இதில் நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ேபசினார். முன்னதாக தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் புதுமை அமைப்பின் 5-வது மண்டல கள ஒருங்கிணைப்பாளர் சண்முக மாரியப்பன் வரவேற்று பேசினார். நிறைவாக ஆட்டோ மொபைல் துறை தலைவரும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுடலைக்கண்ணு அவர்கள் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் தென்தமிழத்தில் உள்ள பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள் 45 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் ஆலோசனையின்படி, கல்லூரி முதல்வர் வழிகாட்டுதலில் தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பளர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×