search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England vs india Test series"

    இங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி அதிக வெற்றிகளை ருசித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. தற்போதைய இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 1-4 என படுதோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் கடந்த 14 டெஸ்ட் போட்டியில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 11 தோல்வியை சந்தித்துள்ளது. ஆசிய அணிகளில் பாகிஸ்தான் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. வெற்றியிலும் முன்னணி வகிக்கிறது.

    பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 12-ல் வெற்றி பெற்றுள்ளது. 23-ல் தோல்வியடைந்துள்ளது. 18 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.



    இந்தியா 62 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. 34 போட்டிகளில் தோல்வியையும், 21-ல் டிராவும் செய்துள்ளது.

    இலங்கை அணி 18 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8-ல் தோல்வியையும், 7-ல் டிராவும் கண்டுள்ளது.

    வங்காள தேசம் தான் விளையாடிய நான்கு டெஸ்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
    தற்போதுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டுதான் முழுமையானது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #ENGvIND
    கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர், தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டே மிகவும் முழுமையானது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘தற்போதுள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டுதான் இங்கிலாந்து தொடருக்கான மிகவும் முழுமையானது. என்னுடைய மதிப்பீட்டின்படி, இந்த யூனிட்டின் தாக்குதல் மிகவும் சிறந்ததாக இருக்கும். ஸ்விங் பவுலரான புவனேஸ்வர் குமார். மிகவும் உயரம் கொண்ட இசாந்த் சர்மா, பந்தை தரையில் பலமாக தாக்கும் பும்ரா, மிகவும் திறமை வாய்ந்த வேகமாக வீசும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நம் பெற்றுள்ளோம். பல்வேறு தரப்பட்ட பந்து வீச்சை கொண்டு சிறந்த காம்பினேசன்.



    தற்போதுள்ள இந்திய அணி தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பெரும்பாலான நேரத்தில் அதிக அளவில் பேட்டிங் செய்கிறார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் தற்போது அதிக அளவில் ரன்கள் அடிக்க உதவியாக இருக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் ஐந்தாறு ஓவர்கள் வீசுவது பெரிய விஷயம் அல்ல. முக்கியமான நேரத்தில் பந்து வீச்சாளர்கள் ரன்கள் அடிப்பது அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.
    இந்தியா தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவதற்காக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இந்திய அணி இங்கிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது

    இந்த தொடரில் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 2016-ம் ஆண்டில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் குணமடைந்தாலும் அவ்வப்போது வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்தியா தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதாலும் தொடர் முழுவதும் ஆண்டர்சன் விளையாட வேண்டிய நிலையில் உள்ளார்.

    இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூலை 20-ந்தேதிக்குப் பிறகுதான் பயிற்சிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இதுகுறித்து இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பெய்லிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவிற்கு எதிராக ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து 6 வார காலம் இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறோம். பந்து வீச்சாளர்களுக்கு இந்த 6 வாரமும் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது வலது கை தோள்பட்டை காயத்தை சரிப்படுத்த வேண்டும். இதனால் இந்தியா தொடருக்கு அவர் தயாராவதற்கு தற்போதில் இருந்து 6 வாரங்கள் ஓய்வில் இருப்பது சரியான வழியாக இருக்கும் என அறிவுரை வழங்கினோம். முதலில் ஓய்வு எடுக்கும் ஆண்டர்சன், மெதுமெதுவாக கிரிக்கெட்டிற்கு திரும்புவார். இந்த காலக்கட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் விட இருந்தார்’’ என்றார்.
    ×