search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தொடருக்காக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 6 வாரம் ஓய்வு
    X

    இந்திய தொடருக்காக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 6 வாரம் ஓய்வு

    இந்தியா தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவதற்காக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இந்திய அணி இங்கிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது

    இந்த தொடரில் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 2016-ம் ஆண்டில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் குணமடைந்தாலும் அவ்வப்போது வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்தியா தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதாலும் தொடர் முழுவதும் ஆண்டர்சன் விளையாட வேண்டிய நிலையில் உள்ளார்.

    இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூலை 20-ந்தேதிக்குப் பிறகுதான் பயிற்சிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இதுகுறித்து இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பெய்லிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவிற்கு எதிராக ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து 6 வார காலம் இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறோம். பந்து வீச்சாளர்களுக்கு இந்த 6 வாரமும் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது வலது கை தோள்பட்டை காயத்தை சரிப்படுத்த வேண்டும். இதனால் இந்தியா தொடருக்கு அவர் தயாராவதற்கு தற்போதில் இருந்து 6 வாரங்கள் ஓய்வில் இருப்பது சரியான வழியாக இருக்கும் என அறிவுரை வழங்கினோம். முதலில் ஓய்வு எடுக்கும் ஆண்டர்சன், மெதுமெதுவாக கிரிக்கெட்டிற்கு திரும்புவார். இந்த காலக்கட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் விட இருந்தார்’’ என்றார்.
    Next Story
    ×