search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "end on bjp"

    இடைத்தேர்தல்களில் பெற்ற தோல்வி, பாஜகவின் அழிவு ஆரம்பமாகி விட்டதை உணர்த்துவதாக உள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #CMMamataBanerjee #BypollResults
    கொல்கத்தா:

    சமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கணிசமான தொகுதிகளை இழந்துள்ளது.

    இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் தக்க பாடத்தை கற்றுத் தந்துள்ளது. இதில் மாநில கட்சிகள் தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளன. எனவே மாநில கட்சிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும்.

    ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மேகாலயாவில் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் உபியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

    இதேபோல், பெங்காலில் மஹேஷ்தலா திரிணாமுல், பாஜக மற்றும் சிபிஐ எம் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

    இதில் பாஜக, சிபிஐ எம் பெற்ற வாக்குகளை விட அதிகளவில் வாக்களித்து திரிணாமுல் கட்சியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றிகள். இது மக்களின் வெற்றி. கடந்த முறை நடந்த தேர்தலில் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால், இப்போது 62000 வாக்குகள் வித்தியாசத்தி வெற்றி கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

    எனவே, மாநில கட்சிகள் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதுதான் வெற்றிக்கான பார்முலா. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி, அது மரணத்தின் விளிம்பில் இருப்பதையே காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
    #CMMamataBanerjee #BypollResults
    ×