என் மலர்
நீங்கள் தேடியது "Empowerment Competition"
- பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வலுதூக்கும் போட்டி நடக்கிறது.
- 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்
கோவை,
தமிழ்நாடு வலுதூக்கும் சங்கமும், கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியும் இணைந்து தமிழ்நாடு அளவிலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்க கூடிய மாணவ- மாணவிகளுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டிகளை கோவை அரசூரில் அமைந்துள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நாளை (5-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் நடத்துகின்றன.
தமிழகம் முழுவதும் இருந்து 54 கல்லூரிகள், 45 பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் கல்லூரி, பள்ளிக்கு சாம்பியன் பட்டமும், மாணவ- மாணவிகளுக்கு பதக்கம், கே.பி.ஆர். வலுதூக்கும் சுழல் கேடயமும் வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் செயலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.






