என் மலர்
நீங்கள் தேடியது "EB Poles"
- குருந்துடையார்புரத்தில் 3 மின் கம்பங்கள் முற்றிலும் சேதமானது.
- கமிஷனர் பங்களா அருகில் மரக்கிளைகள் சரிந்து மின் தடங்கள் ஏற்பட்டுள்ளது
நெல்லை:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் கோடைமழை காரணமாக நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட மின்தடங்களை உடனுக்குடன் போர்கால அடிப்படையில் மறு சீரமைப்பு பணிகள் மேற் கொள்ள நெல்லை மின் பகிர் மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவிட்டார்.
மின் கம்பங்கள் சேதம்
அதன் அடிப்படையிலே நகர்புறக் கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் மின்பொறியாளர்கள், அனைத்து பணியாளர்கள், ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள ப்பட்டு நேற்று இரவோடு இரவாக மின் வினியோகம் வழங்கப்பட்டது.
இன்று காலை ஏற்பட்ட நெல்லை சந்திப்பு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட குருந்துடையார்புரத்தில் மரம் முற்றிலும் சரிந்து 3 மின் கம்பங்களும், மின்பாதைகளும் முற்றிலும் சேதமானது.
சீரமைப்பு பணிகள்
மகராஜாநகர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட கமிஷனர் பங்களா அருகில் மரக்கிளைகள் சரிந்து மின் தடங்கள் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பிரிவு 2 அலுவலகத்துக்கு உட்பட்ட மருதம்நகரில் ஏற்பட்ட மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது ஆகியவை போர்க்கால அடிப்ப டையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.
அப்போது உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் உமா மகேஸ்வரி, வெங்க டேஷ், கார்த்திக்குமார் ஆகியோர் அந்த பகுதியில் முகாமிட்டு பணிகளை செய்தனர்.






