search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eachanari"

    • இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.
    • கரடி நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்:

    கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் பின்புறம் குரும்பபாளையம் பிரிவு செல்லும் சாலையில் குழந்தைவேல் நாச்சி அம்மாள் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உள்ளது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். அப்பகுதி மக்கள் நள்ளிரவில் கரடி நடமாடுவது குறித்து மிகவும் அச்சம் அடைந்த நிலையில் உள்ளனர். இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.

    இதனை கண்ட வனத்து றையினர் உடனே இன்று காலை அப்பகுதிக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்கள் நேரில் பார்த்ததை கூறியதை அடுத்து கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரடியின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கரடி எவ்வளவு தூரம் நடந்து சென்றது என்பதையும் சோதனை நடத்தினர். கரடியை கூண்டு வைத்து பிடிக்கலாமா அல்லது வேறு எந்த முறையில் பிடிக்கலாம் என்று தீவிர ஆய்வு செய்தனர்.

    பின்பு அப்பகுதி மக்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருட்டான இடங்களில் தெரு விளக்குகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று முறையிட்டனர். இனிவரும் காலங்களில் கரடி நடமாட்டம் இருந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    • ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், பொள்ளாச்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்
    • கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி மாலை கோவை வருகிறார்.அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 15-ந் தேதி காலை மலுமிச்சம்பட்டி அடுத்த ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக மலுமிச்ச ம்பட்டி பகுதியில் மருதமலை சேனாதிபதி தலைமையில் தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆேலாசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈச்சனாரி பகுதியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தினை மதுக்கரை தாசில்தார் பர்ஸானா, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும். என்ன வசதிகள் செய்ய வேண்டும். இடையூறு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்துவது, எப்படி நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை எங்கு நிறுத்துவது என்பது குறித்து விரிவாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    ×