search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The forest department inspects"

    • இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.
    • கரடி நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்:

    கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் பின்புறம் குரும்பபாளையம் பிரிவு செல்லும் சாலையில் குழந்தைவேல் நாச்சி அம்மாள் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உள்ளது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். அப்பகுதி மக்கள் நள்ளிரவில் கரடி நடமாடுவது குறித்து மிகவும் அச்சம் அடைந்த நிலையில் உள்ளனர். இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.

    இதனை கண்ட வனத்து றையினர் உடனே இன்று காலை அப்பகுதிக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்கள் நேரில் பார்த்ததை கூறியதை அடுத்து கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரடியின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கரடி எவ்வளவு தூரம் நடந்து சென்றது என்பதையும் சோதனை நடத்தினர். கரடியை கூண்டு வைத்து பிடிக்கலாமா அல்லது வேறு எந்த முறையில் பிடிக்கலாம் என்று தீவிர ஆய்வு செய்தனர்.

    பின்பு அப்பகுதி மக்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருட்டான இடங்களில் தெரு விளக்குகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று முறையிட்டனர். இனிவரும் காலங்களில் கரடி நடமாட்டம் இருந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    ×