search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Industrial Center General Manager"

    • ஸ்கை லைட் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மூன்று மாத கால இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
    • புதிதாக தொழில் தொடங்க இருப்ப வர்களுக்கு மானியத்துடன் வியாபாரம் தொடங்குவதற்கு ரூ. 5 லட்சம் வரை அரசு கடன் வழங்குகிறது.

    தென்காசி:

    தென்காசி மேலகரத்தில் செயல்பட்டு வரும் ஸ்கை லைட் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மூன்று மாத கால இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

    இங்கு 7-வது பயிற்சி பிரிவில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா மலையான் தெருவில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    தையல் பயிற்சி ஆசிரியை உஷா தேவி இளங்கோ வரவேற்றார். டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் சைலப்பன் டிரஸ்டின் சேவைகள் பற்றி எடுத்துரைத்தார்.

    தென்காசி மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் மாரியம்மாள் தலைைம தாங்கி பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறிய போது,

    புதிதாக தொழில் தொடங்க இருப்ப வர்களுக்கு மானியத்துடன் வியாபாரம் தொடங்குவதற்கு ரூ. 5 லட்சம் வரையும், உற்பத்தி தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.15 லட்சம் வரையும் அரசு கடன் வழங்குகிறது.

    இதற்கு கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.

    சிறப்பு பிரிவினருக்கு 42 வயது வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் .

    முதலீடாக 5சதவீதம் மட்டுமே தொழில் தொடங்குபவர் கள்செய்தால் போதும். மேலும் அரசு மானியமாக 25 சதவீதம் வழங்கப்படுகிறது.

    மேலும் பி.எம். இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் கடன் பெற கல்வி தகுதி ஏதும் தேவையில்லை. வயதுவரம்பு 60 வயது வரை உள்ளவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்க உள்ள நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் அரசு மானியமாக 15 சதவீதம் முதல் உற்பத்தி 35 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழிலுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

    எனவே பெண்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தும் விதமாக கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு அரசின் கடன் திட்டத்தில் கடன் பெற்று தாங்களும் மேம்படுவதோடு தங்கள் குடும்பத்தினரையும் மேம்படுத்தலாம் என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குற்றாலம் ரோட்டரி கிளப் சக்தி தலைவர் கவிதா, ரத்தினகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் சேலைகள் வழங்கினர்.

    ரோட்டரி கிளப் சேலம் வெஸ்ட் சார்பில் பயிற்சி முடித்த பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கொல்கத்தா ப்ளூ ஸ்டார் லிமிடெட் ஓய்வு பெற்ற மண்டல மேலாளர் சுப்பிரமணியன், ஸ்கைலட் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவன ராதா, செயலாளர் நவநீதகிருஷ்ணன் உறுப்பினர்கள் நாகராஜன் ,சபாபதி குமார் ,சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×