search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dinesh Lakshmanan"

    • இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'.
    • பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.

    அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    வினோ இயக்கத்தில் ப்ரித்வி விஜய் - மஹி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மங்கை மான்விழி அம்புகள்' படத்தின் விமர்சனம்.
    மலைப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வரும் நாயகன், ப்ரித்வி விஜய் அவருடன் படிக்கும் நாயகி மஹியை காதலித்து வருகிறார். மஹியிடம் எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். காதலை சொன்னால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது காதலை சொல்லாமலே இருக்கிறார். 

    இந்த நிலையில், ப்ரித்வி ஒரு விபத்தில் சிக்கி தனது பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார். மஹியை காதலித்ததையும் மறந்துவிட, கடைசியில் தனது காதலை மஹியிடம் சொன்னாரா? அவர்களது காதல் என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 



    நாயகன் ப்ரித்வி விஜய் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார். மஹி அழகான பதுமையாக வந்து செல்கிறார். இருவருக்கிடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. 

    கல்லூரி காதல் பற்றி பல்வேறு படங்கள் வந்து வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஒரு கல்லூரியில் நடக்கும் காதலை மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் வினோ. புதுமையான காதல் காட்சிகள், காமெடி என சில இடங்களில் தொய்வுடன் ஓரளவுக்கு ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். துணை கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். 

    தமீம் அன்சாரியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். தினேஷ் லக்‌ஷ்மணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `மங்கை மான்விழி அம்புகள்' கூர்மை.

    ×