என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindukal Srinivasan"

    ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சிறப்பாக இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தொடர்பாக, டிடிவி தினகரன் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.#TTVdinakaran
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஜெயலலிதா ஆட்சியை விட சிறப்பாக நடப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி இருக்கிறார். அவர் எப்போதுமே காமெடியாகத்தான் பேசுவார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    ஹைட்ரோ கார்பன் ஒரு நல்ல திட்டம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். அவர் மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் நல்லது என்றுதான் சொல்வார். காவிரி நீர் வராதது கூட நல்லதுதான் என்று கூறுவார்கள். ஏன் என்றால் நாம் அங்கு ரியல் எஸ்டேட் செய்யலாம் என்பார்கள். மக்களை கேட்டால்தான் உண்மை தெரியும்.

    குட்கா வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யாது எனறு சொல்லிவிட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறார்கள். இந்த அரசு எல்லாவற்றையும் மாற்றி மாற்றித்தான் செய்வார்கள்.

    உதாரணமாக ஓ.பன்னீர் செல்வம் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திட்ட மிட்டபடி திறக்கப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று கூறுகிறார்.

    பாராட்டும்படி இந்த அரசு எதுவும் செய்யவில்லை. பொய்கள் சொல்லும் இவர்களை எப்படி பாராட்டுவது.

    எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இங்கு நடப்பது பா.ஜனதாவின் கிளை அலுவலகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.#TTVdinakaran
    ×