search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devendra Yadav"

    • அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது.
    • பிலாய் எம்.எல்.ஏ. தேவேந்திர யாதவ், சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உள்ளிட்டோருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்கு நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தணை வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

    இந்தநிலையில் நிலக்கரி வரி விதிப்பு முறைகள் தொடர்பாக சத்தீஷ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள், அலுவலங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    பிலாய் எம்.எல்.ஏ. தேவேந்திர யாதவ், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உள்ளிட்டோருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டது.

    சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு வருகிற 24-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. அவரது 3-ம் தர அரசியலுக்கு இது உதாரணம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    ×