search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demanding demands of"

    • பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    பவானி அருகே ஆப்பகூடல் மெயின் ரோட்டில் ஜம்பை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரணடனர்.

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கிட வேண்டும். கால்நடை மருத்துவர் வாரம் ஒருமுறை வர வேண்டும்.

    50 சதவீதம் கால்நடை தீவன மானியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். கால்நடைகளுக்கு 24 மணி நேரமும் வாரத்தில் அனைத்து நாட்களும் இலவச மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும்.

    கால்நடை களுக்கு தடை இல்லாமல் விலையில்லா இறப்பு காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதேபோல் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரும் வரை பல்வேறு கட்ட போரா ட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.

    இதையொட்டி அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    ×