search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt Mela"

    • சிவகாசியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் மேளா நடக்கிறது.
    • இந்த திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சேர்மன் சண்முகநாடார் ரோடு, 2வது தளத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (17-ந் தேதி) முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இந்த கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    இந்த சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய- மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.150 லட்சம் வரை, வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் சுயஉதவிக்குழுக்கடன்கள் மற்றும் டாம்கோ, டாப்செட்கோ கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா வருகிற 8-ந்தேதி அனைத்து சங்க வளாகத்தில் நடக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடன் மேளா

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் மாற்றுத் திறனாளிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், டாம்கோ, டாப்செட்கோ கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் கடனை பொறுத்தமட்டில் உரிய தவணைக்குள் செலுத்தும் பட்சத்தில் கடனுக்கான வட்டி தொகை முழுவதும் தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பெறப்பட்டு கடன்தாரர்களது கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழுக்கடன்கள் மற்றும் டாம்கோ, டாப்செட்கோ கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    உறுப்பினர் சேர்க்கை

    மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் மேளா வருகிற 8-ந்தேதி அனைத்து சங்க வளாகத்திலும், மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா வருகிற 19-ந்தேதியும், டாம்கோ, டாப்செட்கோ கடன் 30-ந்தேதியும் நடக்கிறது. எனவே பொதுமக்கள், உறுப்பினர்கள் முகாம் நாட்களில் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி விண்ணப்பத்தை பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கடன் பெறலாம்.

    அதேபோன்று கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் மேற்கண்ட முகாம் நாட்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் பெற்று ரூ.100 பங்குத்தொகையும், ரூ.10 நுழைவுக்கட்டணமும் செலுத்தி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேரலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×