என் மலர்
நீங்கள் தேடியது "dead baby"
- இறந்து கிடந்த குழந்தை பெண் குழந்தை என்பதும், அது பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கும் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தை யாருடையது? அதனை குளத்தில் வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே மேலதிருவேங்கடநாதபுரம் கிராமம் உள்ளது.
இங்குள்ள குளத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று குளத்தில் இறந்த நிலையில் கிடந்த குழந்தை உடலை மீட்டனர்.
அந்த குழந்தை பெண் குழந்தை என்பதும், அது பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கும் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தை யாருடையது? அதனை குளத்தில் வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.






