search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daytime express"

    • செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயிலானது, மதுரை ரெயில் நிலையத்தை 10.35 மணிக்கு சென்றடையும். அதைப்போல திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், திண்டுக்கல் மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு புறப்படும்.
    • செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலை உடனடியாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    நெல்லையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ஈரோடு, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் முக்கியமான ெரயில் ஆகும்.

    2 ரெயில்களாக பிரிப்பு

    கொரோனா காலத்திற்கு முன்பாக இந்த ரெயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கலில் 2 ெரயிலாக பிரிக்கப்பட்டு ஒரு ெரயில் திருச்சி, தஞ்சாவூா் வழியாக மயிலாடுதுறைக்கும், மற்றொரு ரெயில் ஈரோடுக்கும் சென்றது.

    ரெயில்வே வாரியத்தின் உத்தரவின்படி இணைப்பு ரெயில்கள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

    ஈரோடு - நெல்லை

    எனவே தற்போது நெல்லையில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் தனி ரெயில் சேவையாகவும், திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் தனி ரெயில் சேவையாகவும் இயக்கப்பட உள்ளது. இதில் ஈரோடு - நெல்லை, மயிலாடுதுறை - திண்டுக்கல் ரெயில்கள் வருகிற 11-ந் தேதி முதலும், திண்டுக்கல்- மயிலாடுதுறை ரெயில் 12-ம் தேதியும், நெல்லை- ஈரோடு ரெயில் 13-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    புதிய எக்ஸ்பிரஸ்

    இந்நிலையில் தென்காசி மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரெயிலை திண்டுக்கல்-மயிலாடுதுறை ரெயிலோடு இணைத்து செங்கோட்டை -மயிலாடு துறை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயிலானது, மதுரை ரெயில் நிலையத்தை 10.35 மணிக்கு சென்றடையும். அதைப்போல திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், திண்டுக்கல் மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு புறப்படும்.

    இவ்விரு ரெயில்களின் நேரங்களும் இணைப்புக்கு ஒத்துப் போவதால் செங்கோட்டை- மதுரை ரெயிலை மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யலாம். அதைப்போல மதியம் 11.25 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை -திண்டுக்கல் ரெயிலானது, திண்டுக்கல் ரெயில் நிலையத்தை மாலை 4 மணிக்கு சென்றடையும்.

    அதைப்போல மதுரை- செங்கோட்டை ரெயில் மதுரையில் இருந்து மாலை 5.10- க்கு புறப்படும் என்பதால் மயிலாடுதுறை -திண்டுக்கல் ரெயிலை மதுரை- செங்கோட்டை ரெயில் உடன் இணைத்து இயக்குவது எளிது.

    இந்த ரெயில் இயக்கு வதற்கு கூடுதல் ரெயில் பெட்டிகள் தேவை யில்லை. மேலும் தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு புதிய பகல்நேர இணைப்பு கிடைக்கும். எனவே செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலை உடனடியாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×