search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore sons murder"

    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட சிவசங்கரி, எனது கணவர் பொறுமையானவர், அவரை அழ வைத்துவிட்டேன் என்று போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவசங்கரி தனது கணவர் மதிவாணன், போலீஸ் அதிகாரி, தாய் சுமதி, தங்கை ஆகிய 4 பேருக்கு உருக்கமான கடிதங்களை எழுதி உள்ளார்.

    போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், எனது கணவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். நான் எனது கணவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டேன்.

    எனது கணவர் பொறுமையானவர். நல்லவர். நான் அவரை அழவைத்து விட்டேன். நான் எனது 2 மகன்களையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டேன். இதற்கு நானே காரணம். எங்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படியே எனது கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதேபோல் மற்றவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதங்களை சிவப்பு மையால் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் மகன்களை கொன்று தற்கொலை செய்ததற்கான காரணங்களை சிவசங்கரி குறிப்பிடவில்லை.

    2 மகன்களை சிவகங்கரி வி‌ஷம் கொடுத்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பம் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 48). இவர் கூத்தப்பாக்கத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35).

    இவர்களுக்கு பாவேஷ் கண்ணா (12), ரபிஷ் கண்ணா (8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். அங்குள்ள தனியார் பள்ளியில் பாவேஷ் கண்ணா 7-ம் வகுப்பும், ரபிஷ்கண்ணா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சிவசங்கரி வீட்டில் தனது மகன்களுடன் இருந்தார். திடீரென்று அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகன்களை யார் காப்பாற்றுவார்கள்? என்று எண்ணினார்.

    பின்னர் அவர் குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அதனை தொடர்ந்து தனது மனதை கல்லாக்கி கொண்டு மகன்களை கொல்ல முடிவு செய்தார்.

    பின்னர் அவர் தனது மகன்களை முத்தமிட்டு கொஞ்சினார். அதன் பின்னர் 2 மகன்களையும் கொன்றார். மகன்கள் இறந்ததை அறிந்ததும் அவர்களது உடல்களை சுற்றி பூக்களை தூவி கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் சிவசங்கரியும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மெடிக்கல் ஸ்டோரை பூட்டி விட்டு மதிவாணன் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    கதவை தட்டிப் பார்த்தார் இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் சிவகங்கரி போனை எடுக்கவில்லை.

    உடனே பதறிபோன மதிவாணன் தனது நண்பரை அழைத்தார். அவர் வந்தவுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    வீட்டில் உள்ள ஒரு அறையில் சிவசங்கரி தூக்கில் பிணமாக தொங்கினார். அவருக்கு கீழே மகன்கள் பாவேஷ்கண்ணா, ரபிஷ்கண்ணா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து மதிவாணன் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து மதிவாணன் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மதிவாணன் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலை செய்து கொண்ட சிவகங்கரி தனது கணவர் உள்பட 4 பேருக்கு கடிதங்கள் எழுதி வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் சிவகங்கரி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது பற்றி உருக்கமாக கூறியுள்ளார்.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×