என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது கணவர் பொறுமையானவர், அவரை அழ வைத்துவிட்டேன்- தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம்
Byமாலை மலர்19 Feb 2019 11:02 AM GMT (Updated: 19 Feb 2019 11:02 AM GMT)
கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட சிவசங்கரி, எனது கணவர் பொறுமையானவர், அவரை அழ வைத்துவிட்டேன் என்று போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவசங்கரி தனது கணவர் மதிவாணன், போலீஸ் அதிகாரி, தாய் சுமதி, தங்கை ஆகிய 4 பேருக்கு உருக்கமான கடிதங்களை எழுதி உள்ளார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நானும், எனது கணவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். நான் எனது கணவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டேன்.
எனது கணவர் பொறுமையானவர். நல்லவர். நான் அவரை அழவைத்து விட்டேன். நான் எனது 2 மகன்களையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டேன். இதற்கு நானே காரணம். எங்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படியே எனது கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதேபோல் மற்றவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதங்களை சிவப்பு மையால் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் மகன்களை கொன்று தற்கொலை செய்ததற்கான காரணங்களை சிவசங்கரி குறிப்பிடவில்லை.
2 மகன்களை சிவகங்கரி விஷம் கொடுத்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×