என் மலர்
நீங்கள் தேடியது "CSI"
- பிஷப் பர்னபாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருப்பதாக உதவி கலெக்டர் கார்த்திகேயினி உத்தரவிட்டார்.
- ஜனவரி மாதம் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
நெல்லை:
தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல திருச்சபையில் பிஷப் பர்னபாஸ் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் ஆகியோர் தலைமையில் இரு தரப்பினராக பிரிவு ஏற்பட்டு நடந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் பிஷப் பர்னபாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருப்பதாக உதவி கலெக்டர் கார்த்திகேயினி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று திருமண்டல அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிஷப் பர்னபாஸ் தலைமையில் அங்கே ஜெபம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
சுமார் 1 மாதமாக அடைக்கப்பட்டிருந்த டயோசீசன் அலுவலகம் திறக்கப்பட்டது. ஏன் எதற்காக பிரச்சினை எழுந்தது என்பது தெரிய வில்லை. இனியும் அனைவரும் சகோதரத்து வத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். யாரையும் இந்த விஷயத்தில் குறை சொல்ல விரும்பவில்லை.
திருச்சபை அன்பை வெளிப்படுத்துவது. எல்லோரும் இணைந்து செயல்படுவோம்.வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை எங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதத்துடன் எங்களுடைய குழுவின் பதவி காலம் முடிவடைகிறது. வருகிற ஜனவரி மாதம் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனக ராஜ், உயர்கல்வி மேலாளர் சுதர்சன், ஆரம்பக் கல்வி மேலாளர் அருள்ராஜ் பிச்ச முத்து, சொத்து கமிட்டி சத்தியநேசன், கல்லூரி தாளாளர்கள் கே.பி.கே. செல்வராஜ், ஜெகன், ஜெய்கர், கதீட்ரல் பள்ளி தாளாளர் சாலமோன் டேவிட், அசோக், மாரா சிங், வக்கீல்கள் ஜெனி, பாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் டியூக் துரைராஜ் உடன் இருந்தனர்.
முன்னதாக டயோசீசன் அலுவலகத்துக்கு வந்த பிஷப் பர்னபாசுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.






