search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criticised"

    பிரதமர் மோடியை கொல்ல சதி நடப்பதாக கூறி பா.ஜ.க. அனுதாபம் தேடுவதாக சரத் பவார் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார். #ModiAssassinationPlot #FadnavisCriticisedPawar
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறி பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களிடையே தற்போது அக்கட்சிக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்து வருவதாகவும், அதன் காரணமாக இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்களை வைத்து அனுதாபம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் பவார் கூறியிருந்தார்.

    அவரது கருத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மோடியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்திய போலீசார் திரட்டிய தகவல்களை சரத் பவார் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சியின் தலைவர் அல்ல, நமது நாட்டின் தலைவராக இருக்கிறார். சரத் பவார் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. காவல்துறையிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மை விரைவில் வெளியாகும்’ என பட்னாவிஸ் டுவிட்டரில் கூறியுள்ளார். #ModiAssassinationPlot  #FadnavisCriticisedPawar
    ×