என் மலர்
நீங்கள் தேடியது "crescent"
- இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் முக்கியமானது ரம்ஜான்
- நேற்று சவுதி அரேபியாவில் ரமலான் நோன்பிற்கான பிறை தெரிந்தது.
தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், நாளை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது.
இன்று மாலை பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். ரமலான் மாதம் வழக்கமாக 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். மார்ச் 18 அல்லது 19 அன்று ரமலான் முடிவடைந்து, அதைத் தொடர்ந்து ஈத்-அல்-பித்ர் (ரம்ஜான் பண்டிகை) கொண்டாடப்படும்.
- கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி ரவிநாரயணன் சரஸ்வதி ஈஸ்வரி செய்தனர்.






