search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corn kabab"

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கார்ன், பன்னீர் சேர்த்து கபாப் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சோளம் - 2
    உருளை கிழங்கு - 1 கப்
    பன்னீர் - 1/2 கப்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்
    இஞ்சி - சிறிது
    கொத்தமல்லி - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    சீரக தூள் - 1/2 ஸ்பூன்
    சோள மாவு - 2 ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப



    செய்முறை :

    சோளம், உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் (தேவைப்பட்டால் கேரட்டையும் துருவி சேர்த்துக்கொள்ளலாம்) பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கபாப் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

    இந்த கலவையை கபாப்புகளாக தட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கபாபை போட்டு பொரித்தெடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்துக் கொள்ளலாம்.

    சூப்பரான கார்ன் - பன்னீர் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×