search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coral Festival Parade"

    • ஊர்வலம் பொள்ளாச்சி சாலை வழியாக குட்டை திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் வந்து சேர்ந்தது.
    • ஊர்வலப் பாதையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

    உடுமலை :

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாளை சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின பவள விழாவை கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுதந்திர தின பவள விழா ஊர்வலம் நடந்தது.

    உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்கினார். உடுமலை நகரத் தலைவர் எம்.கண்ணாயிரம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரிகந்தசாமி, மருத்துவ அணி தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் விஜய் கண்ணா, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சிவலிங்கம், தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் லோகேஸ்வரன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் சித்தாந்தன், பாரதிய ஜனதா கட்சி உடுமலை நகர துணைத் தலைவர் உமா.குப்புசாமி, பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் பொள்ளாச்சி சாலை, பழைய பேரூந்து நிலையம், தளி சாலை வழியாக குட்டை திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் வந்து சேர்ந்தது.ஊர்வலப் பாதையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

    ×