search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ConstitutionDay"

    கல்லூரி வளாகத்தில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக அரசியல் அமைப்பு தின நிகழ்ச்சி பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனியன், குற்றவியல் நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, இந்திய அரசியல் அமைப்பில் உள்ள உரிமைகள், கடமைகள், சட்டம், நீதி துறையின் செயல்பாடு, உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசினார். பின்னர் கல்லூரி வளாகத்தில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்காவிட்டால் ஆபத்து என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். #SupremeCourt #ChiefJustice #RanjanGogoi
    புதுடெல்லி:

    அரசியல் சட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியதாவது:-

    அரசியல் சட்டம், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், பெரும்பான்மையினரின் மதிநுட்பமாகவும் திகழ்கிறது. சிக்கலான, நிச்சயமற்ற சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டியாக தொடர்ந்து வருகிறது. அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்பது நமக்கு நல்லது. இல்லாவிட்டால், நமது கர்வம், நம்மை பெரும்குழப்பத்துக்கு இட்டுச் சென்று விடும்.

    நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. ஆகவே, வெறுமனே கொண்டாடாமல், வருங்காலத்துக்கான பாதையை வடிவமைக்க இந்நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×