என் மலர்
நீங்கள் தேடியது "Congo violent"
- ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
காங்கோவின் கோமா நகரில் உள்ள மன்சென்ஸ் சிறையில் நூற்றுக்கணக்கான பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த வாரம் காங்கோ நகரத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது மன்சென்ஸ் சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பெண் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த சிறை பகுதி தீவைத்து கொளுத்தப்பட்டதில் ஏராளமான பெண்கள் உடல் கருகி உயிரிழந்ததாக ஐ.நா.அமைதிப் பேச்சுவார்த்தை குழுவின் துணை தலைவர் விவியன் வான் டி பெர்ரேவின் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அதிக விவரங்கள் இல்லை என்றாலும், கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமீபத்தில் நடந்த M23 தலைமையிலான மோதலில் இந்த அட்டூழியங்கள் மிக மோசமானவை என்று கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிறை வளாகப் பகுதியில் சுமார் 2,000 உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக விவியன் வான் டி பெர்ரேவின் கூறினார்.
- காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
- இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்.
புதுடெல்லி:
காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் படையில் இந்தியாவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதற்கிடையே, காங்கோ நாட்டின் வடகிழக்கே உள்ள புடெம்போ நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்கார்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய பி.எஸ்.எப். படைவீரர்கள் இருந்த பகுதியை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதற்கு காங்கோ அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கவேண்டும். இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. செயலாளர் அண்டோனியோ குட்டரெசுடன் தொலைபேசியில் பேசினார். காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது குறித்து பேசிய அவர், இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி வலியுறுத்தினார்.






