search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm mamata banarjee"

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சிகாகோ செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்த கருத்து உண்மையல்ல என வெளியுறவு துறை அறிவித்துள்ளது. #MamataBanarjee #Chicago #MEA
    புதுடெல்லி:

    சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று உரையாற்றி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பேலூர் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எனது சிகாகோ பயணம் ரத்து செய்யப்பட்டதில் மத்திய அரசின் சதி அடங்கியிருக்கிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சிகாகோ செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்த கருத்து உண்மையல்ல என வெளியுறவு துறை அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, வெளியுறவு துறை செயலாளர் ரவீஷ்குமார் கூறுகையில், மம்தா பானர்ஜியிடம் இருந்து சிகாகோ செல்வதற்கான எந்த வேண்டுகோளையும் பெறவில்லை. அவர் சிகாகோ செல்ல  அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார். #MamataBanarjee #Chicago #MEA
    மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா, முதல் மந்திரி மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார். #SheikhHasina #MamataBanarjee
    கொல்கத்தா:

    வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு வந்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் பகுதியில் விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் ‘பங்களாதேஷ் பவன்’ கட்டிடத்தை ஷேக் ஹசினா திறந்து வைத்தார்.

    மேலும், வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

    இந்நிலையில், வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா,  முதல் மந்திரி மம்தா பானர்ஜியை அலிப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

    இந்த சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், இந்தியா - வங்கதேச நாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் எல்லை பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்தும் பேசினோம் என தெரிவித்தார். #SheikhHasina #MamataBanarjee
    மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #panchayatpoll #TrinamoolCongress #MamataBanarjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 14-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன. 621 ஜில்லா பரிசித்துகளுக்கும், 6 ஆயிரத்து 123 பஞ்சாயத்து சமிதிகளுக்கும், 31 ஆயிரத்து 802 கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இதற்கிடையே, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர்.  இரவு 7 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 621 ஜில்லா பரிஷத்களில் திரிணாமுல் காங்கிரஸ் 361 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வென்றுள்ளது.  

    இதேபோல்,  மொத்தமுள்ள 6123 பஞ்சாயத்து சமிதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 4430 இடங்களிலும், பாஜக 385 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், கிராம பஞ்சாயத்து தேர்தலிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் நாங்கள் 90 சதவீத இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளோம்.  இதிலிருந்தே, மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் எங்களுக்கு மக்களின் பெரும் ஆதரவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார். #panchayatpoll #TrinamoolCongress #MamataBanarjee
    ×