search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christmas carol"

    • கிறிஸ்மஸ்‌ விழாவை சிறப்பிக்கும்‌ நோக்கத்துடன்‌ சேலம்‌ ஒய்‌.எம்‌.சி.ஏ சார்பில்‌ ஜக்கிய கிறிஸ்து பிறப்பு பாடல்‌ ஆராதனை ஒய்‌.எம்‌.சி.ஏ வளாகத்தில்‌ நடைபெற்றது.
    • விழாவில்‌ சேலம்‌ மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகள்‌, ஆலயங்கள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ நிறுவனங்களைச்‌ சார்ந்த 21 குழுக்கள்‌ கலந்து கொண்டு சிறப்புப்‌ பாடல்கள்‌ மூலம்‌ கிறிஸ்து பிறப்பின்‌ செய்தியை எடுத்து கூறினர்‌.

    சேலம்:

    கிறிஸ்மஸ்‌ விழாவை சிறப்பிக்கும்‌ நோக்கத்துடன்‌ சேலம்‌ ஒய்‌.எம்‌.சி.ஏ சார்பில்‌ ஜக்கிய கிறிஸ்து பிறப்பு பாடல்‌ ஆராதனை ஒய்‌.எம்‌.சி.ஏ வளாகத்தில்‌ நடைபெற்றது. விழாவில்‌ சேலம்‌ மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகள்‌, ஆலயங்கள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ நிறுவனங்களைச்‌ சார்ந்த 21 குழுக்கள்‌ கலந்து கொண்டு சிறப்புப்‌ பாடல்கள்‌ மூலம்‌ கிறிஸ்து பிறப்பின்‌ செய்தியை எடுத்து கூறினர்‌.

    விழாவில்‌ சேலம்‌ கத்தோலிக்க வின்சென்ட்‌ பல்லோட்டி சபையின்‌ மறைபரப்பு செயலாளர்‌ குயிலி ஆபிரகாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்மஸ்‌ செய்தியினை பகிர்ந்து கொண்டார்கள்‌. சேலம்‌ ஒய்‌.எம்‌.சி.ஏ தலைவர்‌ சாமுவேல்‌ டி. ஸ்டீபன்ஸ்‌ தலைமை தாங்கினார்கள்‌. துணைத்தலைவர்‌ மானுவேல்‌ ஸ்டீபன்ஸ்‌, பொருளாளர்‌ நெல்சன்‌ ஜெயக்குமார்‌, மறைபரப்பு மற்றும்‌ ஒருக்கிணைப்பு பணிக்குழு தலைவர்‌ பெஞ்சமின்‌ மற்றும்‌ நிர்வாக குழுவினர்‌ மற்றும்‌ 700-க்கும்‌ மேற்பட்ட பார்வையாளர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

    வினாடி-வினாப்போட்டியில்‌ கலந்து கொண்டு வெற்றி பெற்ற 3 பேருக்கு கிறிஸ்துமஸ்‌ தாத்தா பரிசுகளை வழங்கினார்‌. விழாவில் சாமுவேல் ஸ்டீபன்ஸ் எழுதிய கிறிஸ்மஸ் மாதத்திற்கான தியானம் குறித்த 'எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை சேலம்‌ ஒய்‌.எம்‌.சி.ஏ பொதுச்செயலாளர்‌ ஜோஸ்‌ மற்றும்‌ நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்‌.

    • கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்றது.
    • சபை மன்றங்களிலுள்ள அந்தந்த சேகர ஆண்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்கள் பாடினர்.

    நாசரேத்:

    தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்றது.

    லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், உப தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபை மன்றங்களிலுள்ள அந்தந்த சேகர ஆண்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்கள் பாடினர். தேவ செய்தி வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை பேராயரும், பிரதமப் பேராயரின் ஆணையாளருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் நாசரேத் தூய யோவான் பேராலய குருவானவர்கள் பொன் செல்வின் அசோக்குமார், மர்காஷியஸ் டேவிட் வெஸ்லி, கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ட்டன் ஜோசப், திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குநர், செயலர் ராபின்சன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஐக்கிய விருந்து பரிமாறப்பட்டது.

    ×