search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinmutra"

    • மிக எளிமையான வழிகளில் ஒன்று தியானம்.
    • புருவ மத்தியில் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே.

    நம்முடை மனம் அமைதிபெற வேண்டும். வாழ்க்கையில் நினைத்த காரியங்களை சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு துணைசெய்யும் மிக எளிமையான வழிகளில் ஒன்று தியானம். தியானம் யாரெல்லாம் செய்யலாம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தியானம் செய்யலாம். தியானம் எந்த இடத்தில் செய்யலாம் என்றால், அமைதியாக இருக்கக்கூடிய எந்த இடமாக இருந்தாலும் அங்கு அமர்ந்து தியனம் செய்யலாம்.

    சரி தியானம் எப்படி செய்ய வேண்டும்? புருவ மத்தியில் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே, புருவ மத்தியை நினைத்துக்கொண்டு இருந்தால் தலைவலி மட்டும் தான் வரும். அப்போது பல பேர் என்ன சொல்லுவாங்க தியானம் செய்தால் தலைவலிதான் வருகிறது. அதனால் தியானம் செய்வதை நிறுத்திவிட்டேன் என்று சொல்வார்கள்.

    இப்போது குதிரையில் சவாரி செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது உடனே நாம் குதிரையில் ஏறி அமர்ந்துவிடுவோம். ஆனால் அந்த குதிரை பழக்கமான குதிரை இல்லை. புது குதிரை. இப்போது ஏறி உட்கார்ந்த உடனேயே குதிரையோட கடிவாளத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். குதிரையை ஓடவிட்டு பார்க்க வேண்டும். அதனை ஓடவிட்டு பார்த்து அது எப்படி ஓடுகிறது. எவ்வளவு தூரம் ஓடுகிறது என்று கவனிக்க வேண்டும். அதற்கு பிறகு அந்த கடிவாளத்தை நமக்கு ஏற்றார் போல் திசை திருப்ப வேண்டும் என்று சொன்னால்தான் அந்த குதிரையை நாம் சிறப்பாக இயக்க முடியும்.

    இதையே நாம் தியானம் செய்யும் போது எடுத்த உடனேயே நாம் நம் மனதை அடக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. மனித மனம் என்பது ஒரு குரங்கு. அது ஓரிடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடத்திற்கு தாவிக்கொண்டே இருக்கும். அப்போது நிலையில்லாமல் இருக்கும் மனதை நிலையாக இரு என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது எவ்வாறு நிலையாக இருக்கும் இருக்காது.

    அப்போ தியானமே செய்ய முடிதா என்றால் செய்யலாம். அதற்காக எடுத்தவுடனேயே 100 சிந்தனைகள் நமக்குள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த 100 சிந்தனைகளையும் நாம் அடக்குவது என்பது கடினம். எனவே அந்த ௧௦௦ சிந்தனைகளையும் ஒரே மையப்புள்ளிக்கு கொண்டுவர வேண்டும்.

    இப்போது உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். யார் யாருக்கு எந்த தெய்வங்களை பிடிக்குமோ அந்த தெய்வங்களை நினைத்துக்கொள்ளலாம். இப்போது நீங்கள் மனதில் நினைத்த அந்த தெய்வத்தை தவிர வேறு எந்த சிந்தனைகளையும் மனதிற்குள் கொண்டுவரக்கூடாது.

    இப்போ 100 சிந்தனைகளை ஒருசேர நாம் ஒரு புள்ளியில் கொண்டுவைத்துவிட்டோம். இப்போது அந்த தெய்வத்தை மட்டுமே நினைக்க வேண்டும். எனக்கு தெய்வம் பிடிக்கவில்லை என்றால் இயற்கை பிடித்தால் இயற்கையை நினைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு அருவி, கடல் மலை அல்லது அழகான மலர், பறவை, மேகம் இவற்றில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை உங்கள் மனதிற்குள் நீங்கள் கொண்டுவர வேண்டும். அதையே நீங்கள் மனதிற்குள் நினைக்க வேண்டும்.

    இதையே நாட்கள் செல்ல செல்ல இதையும் கூட இல்லானல் செய்துவிட முடியும். தனக்குள்ளே தன்னை தேடுகின்ற ஆழ்நிலை தியானத்தை இப்படித்தான் செய்ய வேண்டும். இதனால் பயிற்சி பெறுகிறவர்கள் முதலில் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். எப்படி உட்கார வேண்டும் என்றால் பத்மாசனத்தில் உட்கார வேண்டும். அல்லது வஜ்ஜிராசனத்தில் உட்கார வேண்டும்.

    இல்லையென்றால் எங்களுக்கு வயதாகிவிட்டது. கால்வலி, மூட்டுவலி எல்லாம் உள்ளது என்றால் நீங்கள் எப்போதும் போல் சேரில் கூட அமர்ந்துகொள்ளலாம். சரி சேரில் உட்கார்ந்துவிட்டோம். இப்போது கைகளை எப்படி வைக்க வேண்டும். கைகளில் சின் முத்திரையை வைத்துக்கொள்ளலாம். அதாவது உங்கள் கட்டை விரலையும், நம்முடைய ஆள்காட்டி விரலையும் ஒன்றாக இணைத்து வைத்தால் அதற்கு சின் முத்திரை என்று பெயர்.

    இல்லையென்றால் அவர்கள் இரண்டு கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்துக்கொள்ள வேண்டும். கைகளை கோர்த்தவண்ணம் தியானம் செய்யும்போது கைகளை வைத்துக்கொள்ளலாம். இப்போது எந்த நிலையில் தியானம் செய்ய வேண்டும், எந்த இடத்தில் தியானம் செய்யலாம். எவ்வாறு அமர்ந்து தியானம் செய்யலாம். கைகளை எப்படி வைத்து தியானம் செய்யலாம் என்பதை தெரிந்துகொண்டோம்.

    இதையும் மீறி நாம் எவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்று கேட்டால் தியானத்திற்கு நேரம் என்பது கிடையாது. ஆரம்பத்தில் உங்களால் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க முடிகிறதோ அவ்வளவு நேரம் உட்கார்து தியானம் செய்யலாம். முதலில் உட்காருவதில் சிரமம் இருக்கும். அதுவே பழகப்பழக 10 நிமிடம், 15 நிமிடம் அல்லது ஒருமணிநேரம் கூட இந்த தியானம் என்பதை செய்ய முடியும்.

    இந்த தியானம் செய்வதினால் நமக்கு என்ன பயன் என்று கேட்டால், யாராக இருந்தாலும் முதலில் ஒரு தெளிவான மனநிலை உருவாகும். மிகவும் அருமையாக உடற்கூறுகள் இயங்குவதற்கு உண்டான தன்மை கிடைக்கும். நுரையீரல் நமக்கு நன்றாக வேலை செய்யும். தியானம் செய்யும் போது மூச்சில் நமது கவனம் இருப்பதால் ஆயுள் அதிகரிக்கும்.

    இது இல்லாமல் தியானம் செய்யும் போது உடலும் மனதும் ஒன்றாக சேரும். நல்ல நினைவாற்றல் ஏற்படும். எதை எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவான மனநிலை இருக்கும். ஒரு மனிதனி பண்படுத்தி மனிதனாகவே வைத்திருக்கக்கூடிய உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வது தியானம். அதிலும் ஆழ்நிலை தியானம் தொடர்ந்து செய்துகொண்டு வந்தால் நம்மை இன்னும் அதாவது ஒரு மகானின் நிலைக்கு உயர்த்தும்.

    அதனால் படிப்படியாக தியானம் செய்பவர்களுக்கு இதுதான் வழி. அதனால் ஆரம்பத்தில் முதலில் ஒன்றை நினைக்க வேண்டும். அதன்பிறகு அந்த ஒன்றையும் நீக்கிவிடுவது தான் நமக்கு முழுமையான வெற்றி.

    ×