search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Metro Water"

    • வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
    • தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாடி கட்டிடங்கள் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் செலுத்தலாம்.

    சென்னை :

    இதுகுறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்புகளை எளிதில் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் கடந்த 6-ந் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அல்லது பணிமனை அலுவலகங்களில் நேரிடையாகவும், தொலைபேசி எண் 044-45674567 மற்றும் இணையதளம் https://cmwssb.tn.gov.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஆவணங்கள் உரிமையாளரிடம் சரிபார்க்கப்பட்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று சட்டத்திபடி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னர் உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், இணைப்பிற்குரிய முழுத் தொகையையோ அல்லது முதல் தவணைத் தொகையையோ செலுத்தியவுடன் இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்கள் (சாலை வெட்டு மறுசீரமைப்புக்கான கட்டணங்கள் உள்பட) சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

    தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) 1,800 சதுர அடி வரை இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களும் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் (6 மாதங்களுக்கு ஒருமுறை 5 ஆண்டுகளில்) செலுத்தலாம்.

    தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) மற்றும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய 3 மாடி கட்டிடங்கள் 2,700 சதுரஅடி வரை குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு ஒரே தவணையாகவோ அல்லது 3 தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, 18 மாதங்களில்) செலுத்தலாம்.

    பிற வகையான கட்டிட உரிமையாளர்கள், கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்கான முழு கட்டணத் தொகையை ஒரே தவணையாக செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    இணையம் வழியாக செலுத்தலாம்

    விண்ணப்பதாரர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்களை இணைய வழியிலான வசதியை பயன்படுத்தியோ, ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொதுக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னைக்கு குடிநீர் வாரியத்தால் குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் 1000 மில்லியின் லிட்டர் எல்.எல்.டி. குடிநீரில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையம், புழல் நீரேற்றும் நிலையம், சூரப்பட்டு நீரேற்றும் நிலையம், வீராணம் நீரேற்றும் நிலையம் செம்பரம்பாக்கம் நீரேற்றும் நிலையம் நெம்மேலி மற்றும் மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் எல்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னைக்கு குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டும் குடிநீரின் தரம் தினந்தோறும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பருவமழையின் காரணமாக தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நேற்று வரை 8,929 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

    செம்பரம்பாக்கம் ஏரி

    மேலும் பொதுக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னைக்கு குடிநீர் வாரியத்தால் தினந்தோறும் கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல் வீராணம் நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பருவமழையினால் மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீரில் கலந்து பருகக்கூடிய குளோரின் மாத்திரைகள் சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கிட திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன் அடிப்படையில் 15 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 7,25,000 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் மழை காலங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

    பருவமழைக் காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும். மேலும் உரிய இடைவெளியில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரைச் சேமித்து வைக்க வேண்டாம்.

    மேலும் குடிநீரைச் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்கள், மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

    எனவே பருவமழையினால் தொற்று பரவாமல் இருப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. #ChennaiMetroWater
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி மூலம் சேமிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் முன் ஏற்பாடுகளை செய்யும் வகையில் பொதுமக்களை தயார் படுத்தி வருகிறது.

    வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு மையங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

    கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை சீர் செய்தல், மாடிகளை சுத்தம் செய்தல், கூழாங்கல் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது போன்ற புகைப்படங்களை எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், மற்றும் சென்னை குடிநீர் வெப்சைட் ஆகியவற்றில் போடலாம் என்று குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


    சென்னையில் 8 லட்சத்து 93 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வீடுகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பருவ மழைக்கு முன்பாக சீரமைத்து மழை நீர் வீணாக்காமல் சேமித்தாலே நகரின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவ மழை தொடங்க இருக்கின்ற இக்கால கட்டத்தில் வீடுகளில் மழை சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் மழை நீர் கட்டமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை புகைப்படம் எடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

    சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு படத்தினை எடுத்து வெளியிடலாம்.

    இதில் 25 அயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். சிறந்த புகைப்படத்திற்கு சாம்பியன் பேட்ஜ் வழங்கப்படும்.

    இது தவிர குடிநீர் வாரிய என்ஜினீயர்கள், ஊழியர்கள் வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பினை பார்வையிடுகிறார்கள். தினமும் 10 முதல் 20 வீடுகளை ஆய்வு செய்து மழை நீர் சேகரிப்பு குறித்த விதிமுறைகளை விளக்கி கூறுகிறார்கள். 325 குடிநீர் வாரிய அலுவலகங்கள், 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறார்கள்.

    மேலும் கோயம்பேட்டில் மழை நீர் சேகரிப்பு குறித்த ஓவியப்போட்டியும் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பற்றி பெயிண்டிங் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #ChennaiMetroWater
    ×