என் மலர்
நீங்கள் தேடியது "Cataract Surgery"
- அறக்கட்டளை நடத்தும் ராமானந்த் கண் ஆஸ்பத்திரி ஒன்றில் நடந்த முகாமில் 21 பேர் கண்புரை ஆபரேஷன் செய்து கொண்டனர்.
- பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் அகமதாபாத் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அறக்கட்டளை நடத்தும் ராமானந்த் கண் ஆஸ்பத்திரி ஒன்றில் நடந்த முகாமில் 21 பேர் கண்புரை ஆபரேஷன் செய்து கொண்டனர். இதில் 17 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் ஆமாதாபாத் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற 12 பேரும் ராமானந்த் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை இருந்தது.
- 2 வருடம் கழித்து லென்ஸ் பொருத்தவும் திட்டமிட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அப்பனம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது 9 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை இருந்தது. இதனால் அரவிந்த்குமார் குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் கண்புரை பிரச்சனை இருப்பதை கண்டறிந்து கண்பிரிவு டாக்டர்களை சிகிச்சையளிக்க பரிந்துரைத்தனர். கண்பார்வை பிரிவு டாக்டர்கள் குழந்தைக்கு லென்ஸ் பொருத்தலாமா? என ஆலோசித்தனர்.
ஆனால் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் லென்ஸ் சிகிச்சை செய்ய முடியும் என்பதால் தற்போது கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
முதலில் வலது கண்ணில் சிகிச்சை செய்தனர். ஆரோக்கியமான நிலையில் குழந்தைக்கு கண் பார்வையும் கிடைத்தது. மீண்டும் 1 மாதம் கழித்து இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, 2 வருடம் கழித்து லென்ஸ் பொருத்தவும் திட்டமிட்டனர்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அறுவை சிகிச்சை குழுவில் உள்ள குழந்தைகள், மயக்கவியல், கண்பார்வை போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் டாக்டர்களை பாராட்டினர்.






