என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Carl Hooper"
- லார்ட்ஸ் போட்டியில் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன்.
- கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும்.
டிரினிடாட்:
கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுவர்கள் இந்தியாவை சேர்ந்த சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆவர்.
இந்நிலையில் சச்சின் மற்றும் தன்னை விட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கூப்பர் நான் பார்த்த வீரர்களில் சிறந்தவர். சொல்லப்போனால் நானும் சச்சின் டெண்டுல்கர் கூட அவருடைய திறமையை நெருங்க முடியாது என்று சொல்வேன். கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும். கேப்டனாகவும் கூட பொறுப்புடன் விளையாடிய அவருடைய சராசரி கிட்டத்தட்ட 50 தொடும். இருப்பினும் ஒரு கேப்டனாக மட்டுமே அவர் தனது உண்மையான திறனை நிறைவேற்றினார் என்பது வருத்தமளிக்கிறது.
லார்ட்ஸ் போட்டியில் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன். அவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர். அப்போட்டியில் அவர் சீனியர்களை விட அற்புதமாக பேட்டிங் செய்தார். கார்ல் பேட்டிங் செய்யும்போது அதை தேஷ்மண்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், கோர்டான் க்ரீனிட்ஜ் ஆகியோர் தங்களின் வேலையை விட்டுவிட்டு பார்ப்பார்கள். அந்த வகையில் மிகவும் திறமையான அவர் நாம் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லை.
என்று கூறியுள்ளார்.
- 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஹூப்பர் விளையாடி உள்ளார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.
10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா, 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றை அடையும்.
இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு வெண்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி உள்ளார். 329 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஹூப்பர் பல்வேறு நிலைகளில் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
56 வயதான அவர் பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆன்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்